ஒரு மாதம்கூட ஆகவில்லை. கடந்த நவம்பரில் அமீர்கான் மகள் அய்ரா டைரக்ட் செய்த நாடகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நாடகத்தில் அமீர்கானின் மகன் ஜுனைத் கானும் நடித்திருந் தார். பிரபல நடிகை ஹாஸெல் கீச் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த நாடகம் மீடியா வில் நல்ல விமர்சனங்களைப் பெற்றிருந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/herodaughter.jpg)
ஆனால், அந்த புகழ் வெளிச்சம் மங்குவதற்குள் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தினார் அய்ரா. அவர் தனியே எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அந்தப் படங்கள் அவருடைய அழகை அற்புத மாக வெளிப்படுத்தும்வகையில் இருந்தன. அவர் கொடுத்திருந்த போஸ்கள் பலருடைய பார்வையை கவ்விக்கொண்டன. அவர் சினிமாவைக் குறிவைத்தே அந்தப் படங்களை வெளியிட்டிருப்பதாகப் பேசினார்கள்.
நாடகம் வெளிவந்தபோது அது குறித்துப் பேசிய அமீர்கான், ""எனது மகளும் மகனும் அவர் களுடைய எதிர்காலத்தைத் தாங்களாகவே தீர்மானிக்கிறார்கள். மீடியா அவர்களுடைய திறமையைப் பாராட்டும்போது தந்தையாக எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
அய்ரா அந்த நாடகத்தை இயக்கும் போதோ, அதில் ஜுனைத் நடித்தபோதோ என்னிடம் எந்த உதவியும் கேட்கவில்லை. "ப்ளீஸ்பா எனக்கு உதவுங்கள்!' என்று எப்போதும் கேட்கவில்லை. ஆனாலும் அவர்கள் தங்களை நிரூபித்திருக்கிறார்கள்'' என்று பெருமையாகக் குறிப்பிட்டார்.
ஆனால், அய்ரா வெளியிட்ட படங்கள் குறித்து அவர் இதுவரை கருத்துத் தெரிவிக்கவில்லை.
அப்படி என்னதான் படங்களை வெளியிட்டுவிட்டார், முதலில்... ஒரு மரத்தின்மீது கட்டப்பட்ட மரவீடு ஒன்றிலிருந்து ஸ்ட்ராப் இல்லாத சிவப்புநிற கவுன் அணிந்து போஸ் கொடுத்திருந்தார்! அந்தப் படத்தின்கீழ், "எனக்கு எப்பவுமே மரவீடு பிடிக்கும்' என்று குறிப்பிட் டிருந்தார்.
அடுத்து வெளியிட்ட படங்கள் தான் பேசும் படங்களாகின. முதுகுப் பக்கம் ஓபனாகவும், தொடைகள் தெரியும் வகையில் கிழித்து விடப்பட்ட நீலநிறக் கவுனை அணிந்து கால்களை உயர்த்தி, வில்போல வளைந்தும் ஒரு மரக் கிளையில் படுத்த நிலையில் ஒரு படத்தை வெளியிட்டிருந்தார்!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/herodaughter1.jpg)
அந்தப் படத்தை பார்த்தவர்கள் அவருடைய கவர்ச்சியில் மயங்கிப் போனார்கள் என்பது, படத்தின் கீழ் கொடுத்த கமெண்ட்டுகளில் தெளிவாகியது.
"அழகான கோணங்களில் எடுக்கப்பட்ட அற்புதமான படங்கள்' என்று அய்ராவே கூறியிருந்தார். இந்தப் படங்களைப் பார்த்தால் உடனே அவரை சினிமாவுக்கு புக் செய்து விடுவார்கள் என்றே பலரும் கருத்து தெரிவித்தனர்.
"சினிமாவுக்கு என்ன தேவையோ அதை வெளிப் படுத்தத் தயார்! எனது அப்பா ஒன்றும் சொல்ல மாட்டார்! தாராளமாக என்னைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்' என்று சினிமா தயாரிப் பாளர்களுக்கும் டைரக்டர் களுக்கும் மறைமுகமாக அழைப்பு விடுப்பதாகவே இந்தப் படங்கள் இருக்கின்றன என்பது ரசிகர்களின் கருத்து.
அமீர் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-12/herodaughter-t.jpg)